கோவை: மேற்கூரை இடிந்து ஐவர் இறந்த கோவை மாவட்ட சோம னூர் பேருந்து நிலையம் தற்காலி கமாக மூடப்பட்டது. கடந்த வியாழக்கிழமை மேற் கூரை சரிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழந்தனர். இதனால் சோமனூர் பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் இடிபாடுகள் அகற்றப்பட்ட பிறகு பேருந்து நிலையத்தின் இரு நுழைவாயில் களும் தற்காலிகமாக அடைக்கப் பட்டுள்ளன. நிலையத்திலிருந்த கடைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக் கப்படவில்லை. இதற்கிடையே பேருந்து நிலை யத்தைக் கட்டிய கட்டட ஒப்பந்த தாரருக்கு அனுமதி வழங்கிய பொறியாளர் உட்பட பலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கூரை சரிந்து விழுந்து ஐவர் இறந்த பேருந்து நிலையம். படம்: தமிழக ஊடகம்

