தமிழர் அடையாள அழிப்பின் தொடர்ச்சி: சீமான்

தமிழர் அடையாள அழிப்பின் தொடர்ச்சி: சீமான்

1 mins read
abaadda3-29fc-4419-bbb2-a2f6f1178604
-

சென்னை: சி.பா.ஆதித்தனாரின் சிலை அகற்றப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அதை மீண்டும் நிறுவுவதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்கப்பட்ட தாகத் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், தமிழ்ப் பேரினத்தின் கலை அடையாளமான நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றம் போல, இதுவும் தமிழர் அடையாள அழிப்பின் தொடர்ச்சி தானோ என்ற ஐயத்தைத் தோற்று விப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ஐயங்கள் எதற்கும் இடங்கொடுக்காது ஆதித்த னாரின் சிலையை அவரது பிறந்த நாளுக்கு முன்னர் உடனடியாக நிறுவ வேண்டியது தமிழக அரசின் கடமை என சீமான் வலியுறுத்தி உள்ளார்.