விளக்கம் கோரி 85,000 அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ்

விளக்கம் கோரி 85,000 அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ்

1 mins read
da89354d-55d1-47e7-8176-77db209ea3af
-

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்ற உயர் நீதி மன்ற உத்தரவை மதிக்கும் வகை யில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலர் வெளியிட்ட சுற்றறிக்கை யையும் மீறி, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறது தமிழக அரசு. மொத் தம் 85 ஆயிரம் பேருக்கு இந்த நோட்டீசை அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளின் செய லர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ அறிவித்திருந்தது. கடந்த 7ஆம் தேதி இப்போராட்டம் தொடங்கியது. எனினும், அதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, ஜாக்டோ, ஜியோ அங்கம் வகிக்கும் 60 சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக, அக்டோபர் 15ஆம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைப்ப தாகத் தெரிவித்தனர். இதையடுத்து, ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டு, மீதமுள்ள 17 சங்கங்கள் மட்டும் போராட்டக் களம் கண்டன. உயர்நீதிமன்றத்தின் தடையை மீறி இந்தச் சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிக்குச் செல்லாமல் போராடி வருகின்றனர்.