58 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி இயந்திர ரயில் சென்னையில் இயக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் ஆர்வத் துடன் கண்டு களித்தனர். இந்திய ரயில்வே துறையின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று நீராவி இயந்திரத்துடன் கூடிய ரயில் இயக்கப்படும். இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அந்த ரயில் இயக்கப்படவில்லை. மாறாக, பின்னர் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மூவர்ணக் கொடி போல அலங்கரிக்கப் பட்டு இருந்த அந்த ரயில் எழும்பூர் ரயில் நிலையத்திலி ருந்து கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை இயக்கப்பட் டது. பொதுமக்கள் ரயிலின் அருகில் சென்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். படம்: தகவல் ஊடகம்
58 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி ரயில் இயக்கம்
1 mins read
-

