மதுரை: கார், வேன் மோதிக் கொண்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியான சோகச் சம்பவம் மதுரை அருகே நிகழ்ந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த நூர்ஜகான் கண் சிகிச்சை பெறுவதற்கு தமது குடும்பத்தார் 6 பேருடன் நேற்று முன்தினம் மதுரைக்கு காரில் வந்துள்ளார். அப்போது டி.கல்லுப்பட்டி பகுதி அருகே எதிரே வந்த வேன் மீது கார் மோதியது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் நூர்ஜகான் (55 வயது) உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 வயதான பாத்திமா, ஆயிஷா எனும் இரட்டையர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.
கார், வேன் மோதல்: ஒரே குடும்பத்தில் நால்வர் பரிதாப பலி
1 mins read

