கும்பகோணம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில், கும்பகோணத்தில் பெய்த பேய் மழையால் நூறாண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் இடிந்து விழுந்தது. கும்பகோணம் மடத்துச் சாலையில் தனியாருக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்தில் இரும்பு, மரச்சாமான்கள் விற்பனையகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர் மழையால் பழமையான அக்கட்டடத்தின் சுவர்கள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தன. இதையடுத்து கட்டடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பாதி இடிந்த நிலையில் உள்ள பகுதிகளையும் முழுமையாக இடித்துத் தள்ள உத்தரவிட்டார். இதற்கிடையே கும்பகோணம் சந்தன கோபாலகிருஷ்ணன் கோவிலுக்குச் சொந்தமான மல்லுக்குளத்தைச் சுற்றி கட்டப்பட்ட சுற்றுச்சுவரும் அண்மைய கனமழையால் 50 அடி மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்தது.
கனமழை எதிரொலி: நூறு ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் இடிந்தது
1 mins read

