இந்தியா: இலங்கை உறவு மிக முக்கியம்

இந்தியா: இலங்கை உறவு மிக முக்கியம்

2 mins read

புதுடெல்லி: இலங்கையுடனான நல்லுறவுக்கு அதிக முக்கியத் துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கை வெளியுறவு அமைச் சராக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி புதிதாகப் பொறுப்பேற்ற திலக் மரபானா இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வெள் ளிக்கிழமை வந்தார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் சனிக் கிழமை அவர் சந்தித்து கலந்து ரையாடினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியையும் அவர் சந் தித்தார். இந்தச் சந்திப்பு தொடர் பில் பல விவரங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இணையத்தில் வெளியிட்டார்.

"திலக் மரபானாவுடன் பல் வேறு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தி னேன்," என்று அவர் குறிப்பிட் டார். இந்தச் சந்திப்பு பற்றி இந்தியப் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது. இலங்கை வெளியுறவுக்கான புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற தற்காக திலக் மரபானாவுக்கு மோடி வாழ்த்து கூறினார். புத்த பூர்ணிமாவையொட்டி கடந்த மே மாதம் இலங்கைக்குத் தாம் மேற்கொண்ட பயணம் சிறப் பாக இருந்ததாகவும் அவரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே யான நல்லுறவை மேலும் வலுப் படுத்துவதற்காக இலங்கை அதிபர் சிறிசேனவுடன் பணி யாற்றுவதை எதிர்நோக்கிக் காத் திருப்பதாகவும் மோடி தெரிவித் ததாக அறிக்கை விளக்கியது. முன்னதாக, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை திலக் சந்தித்துப் பேசினார். இதுகுறித்தும் வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பை வெளியிட்டது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இரு நாடு களுக்கு இடையேயான நல் லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்த னர் என்று குறிப்பு தெரிவித்தது.