புதுடெல்லி: வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக ரூ.424 கோடி அனுப்பிய 19 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. போலி நிறுவனங்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கி அதன் மூலம் இதுபோன்ற முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். முறைகேடுகளில் ஈடுபட்ட 19 நிறுவனங்களும் சென்னை மின்ட் தெருவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் அன்னியச் செலாவணி மூலம் ஹாங்காங்குக்கு முறையற்ற வகையில் பணம் அனுப்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடக்கிறது.
சட்டவிரோதமாக ரூ.424 கோடி அனுப்பிய 19 நிறுவனங்கள்
1 mins read

