விமானங்களில் ரசாயனத் தாக்குதல் அபாயம் என இந்தியா எச்சரிக்கை

விமானங்களில் ரசாயனத் தாக்குதல் அபாயம் என இந்தியா எச்சரிக்கை

1 mins read

விமானங்களிலும் ரயில், பேருந்து போன்ற இதர வகை பொதுப் போக்குவரத்துகளிலும் நச்சு வாயு மூலம் ரசாயனத் தாக்குதல் நடத் தப்படக்கூடும் என இந்திய உளவுத் துறைக்குத் தகவல் சென்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழு வதும் உள்ள அனைத்து மாநிலங் களுக்கும் பாதுகாப்பு அமைப்பு களுக்கும் மத்திய உள்துறை அமைச்சு விழிப்பூட்டு எச்சரிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அனைத்து விமான நிலை யங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்கள் ஆகியவற்றில் பயணம் செய் வோரின் உடைமைகளைக் கடுமை யாகச் சோதனையிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, விமானங்களில் சந்தேகத்துக்குரிய பொருட்கள், மரணம் விளைவிக்கக்கூடிய நச்சு வாயு சாதனம் போன்றவை ஏதே னும் தென்படுகிறதா என்று பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

விமானப் போக்குவரத்து நிறு வனங்களுக்கும் உள்துறை அமைச்சு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பி உள்ளது. வர்த் தக விமானப் போக்குவரத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் பல் வேறுவித தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்திருப்பதாக அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் வர்த்தக விமானம் ஒன்றில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரகசிய புலனாய்வுப் பிரிவுக்கு ரசாயனத் தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தெரிவித்துள்ளது.