தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதவு திறந்தபடி ஓடிய டெல்லி மெட்ரோ ரயில்

1 mins read
96a9926b-fdc6-422e-8091-f63fd09c20be
-

டெல்லியில் மெட்ரோ ரயில் ஒன்று கதவு திறந்தபடி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது அந்த ரயிலில் பயணிகள் பலர் இருந்த தாக அதிகாரிகள் தெரிவித்தனர். கதவு ஒன்று திறந்தபடி அந்த ரயில் இரண்டு நிலையங்களைக் கடந்து சென்றதாகவும் கூறப் படுகிறது. வட டெல்லியை குர்காவு னுடன் இணைக்கும் ரயில் பாதையில் இந்த வழக்கத்துக்கு மாறான சம்பவம் நிகழ்ந்தது. திறந்திருந்த கதவு வழியாக யாரும் விழாமல் இருக்க டெல்லி மெட்ரோ ரயில் ஊழியர் ஒருவர் கதவுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு காவல் காத்தார். பயணிகளின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்த காரணத் துக்காக ரயிலை இயக்கியவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.