ஹைதராபாத்: மியன்மார் நாட்டி லிருந்து பல ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதி களாக வெளியேறி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் அண்டை பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத் நக ரில் பொய்யான ஆவணங்களுடன் இந்திய கடவுச்சீட்டைப் பெறுவதற் காக முயற்சி செய்த 20 வயது ரோஹிங்யா முஸ்லிம் இளையர் ஒருவரை போலிசார் கைது செய் துள்ளனர். 'எஷா' என்று அழைக்கப்படும் சந்தேக நபரான முஹமட் இஸ் மாயில் ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டையையும் வைத் திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கடவுச்சீட்டு பெறுவதற் காக தனது முதலாளியிடம் அவர் 18,000 ரூபாய் தந்ததாகவும் விசார ணையில் தெரிய வருகிறது.
'எஷா', மியன்மாரில் உள்ள நயா பகாரா கிராமத்தைச் சேர்ந்த வர் என்று நம்பப்படுகிறது. மியன் மாரிலிருந்து வெளியேறிய அவர் 2014ல் பங்ளாதேஷ் நாட்டில் குடி புகுந்தார். பின்னர் முகவர்கள் உதவி யுடன் சாலை வழியாக அவர் இந் தியாவுக்குள் நுழைந்துள்ளார். புதுடெல்லி வந்தடைந்ததும் பர்மா அகதிகள் முகாமில் தங்கி யிருந்து அருகே உள்ள இடங் களில் அவர் பணியாற்றினார். அப்போது ஐநா அகதிகளுக் கான அடையாள அட்டையை அவர் பெற்றார். இதன் பிறகு மற்றொரு முகவர் உதவியுடன் கர்நாடகாவில் உள்ள பெல்காமுக்கு வந்தார். அங்கு அன்வர் என்பவரைச் சந்தித்து அவரது உதவியுடன் 2016 ஜூனில் ஆதார் அட்டைக்கும் வாக்காளர் அட்டைக்கும் விண் ணப்பித்துப் பெற்றார். இதையடுத்து எஷாவை அன்வர் ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று அப்துல் ரஷீத் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அதுமுதல் அப்துல் ரஜீத் வீட்டில் வாடகைக்கு எஷா தங்கியிருந்தார்.
ரோஹிங்யா முஸ்லிம் இளையரான முகமட் இஸ்மாயில்

