பெங்களூரு: கர்நாடகாவின் சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவாளர்களில் ஒருவரான தமிழக முன்னாள் அமைச்சர் பழனியப்பனை நேற் றும் இரண்டாவது நாளாக தமி ழக காவல்துறையினர் தேடினர். காணாமல்போன அவரைத் தேடி தமிழக காவல்துறையினர் கர்நாடகாவுக்குச் சென்றனர். குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள பெண்டிங் பான் எனும் தனியார் சொகுசு விடுதி யில்தான் தினகரன் ஆதரவு எம் எல்ஏக்கள் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் கோவை பேரூர் காவல் துறை துணைக் கண்காணிப் பாளர் வேல்முருகன் தலைமையில் அங்கு வந்த கோவை பேரூர் காவல்துறையினர், விடுதி நிர் வாகத்திடம் அடையாள அட்டை யைக் காட்டி, அனுமதி பெற்று எம்எல்ஏக்கள் தங்கியிருந்த அறைகளைச் சோதனையிட் டனர்.
நாமக்கல் ஒப்பந்ததாரரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பருமான சுப்பிரமணியம் மர்மமான முறை யில் மரணமடைந்த வழக்கின் தொடர்பில் முன்னாள் அமைச் சரும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏவுமான பழனியப்பனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டி யிருக்கிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவையும் அங்கிருந்த எம் எல்ஏக்களிடம் காவல்துறையினர் காட்டினர். அப்போது எம்எல்ஏக்கள் தங்கத் தமிழ்ச்செல்வன், சோளிங் கர் பார்த்திபன், ஜெயந்தி பத்ம நாபன், கதிர்காமு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து காவல் துறையினர், எங்கள் கடமையைச் செய்ய விடுங்கள் என்று அவர் களிடம் கூறினர். இதன் காரணமாக எம்எல்ஏக் கள் அமைதி காத்தனர்.
ஆனால் சோதனையின்போது எம்எல்ஏ பழனியப்பன் அங்கு இல்லை. அவர் திடீரென மாய மாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்றும் 2வது நாளாக சிபிசிஐடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் குடகுப் பகுதியில் முகாமிட்டு பழனி யப்பன் மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.

