மன்னார்குடி: தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க தற்போது குதிரைப் பேரம் நடந்து வருவதாக சசிகலா வின் சகோதரர் திவாகரன் சாடி உள்ளார். மன்னார்குடியில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், மாநி லத்தில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டிய ஆளுநர் நடப்பவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். "தினகரன் நியமித்துள்ள நிர்வாகிகளுக்கு கட்சித் தொண்டர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் மீது எதிர்த்தரப்பினர் பொய் வழக்குப் போடுவதற்கான நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். "இந்தப் பொய் வழக்குகளைச் சட்டப்படி சந்திப்போம். பழனி சாமி, பன்னீர்செல்வம் இல்லாத அமைச்சரவை அமைய வேண் டும். ஊழல் மிகுந்த அமைச்சர் களை நீக்கவேண்டும். இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம்," என்றார் திவாகரன். சசிகலாவின் அனுமதி பெற்று விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என்றும் கூறினார்.
குதிரைப் பேரம் நடக்கிறது: திவாகரன் குற்றச்சாட்டு
1 mins read

