சேலம்: குடும்ப அட்டையில் மூதாட்டியின் படத்துக்குப் பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் அச்சிடப்பட்டது சேலத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஓமலூர் அருகே உள்ள கமலா புரத்தில் வசித்து வருகிறார் மூதாட்டி சரோஜா. இவர் அண் மையில் ஸ்மார்ட் குடும்ப அட் டைக்கு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த அட்டையை வாங்கியவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் சரோஜாவின் புகைப்படத்துக்குப் பதிலாக பிரபல திரைப்பட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிடப் பட்டிருந்தது. இதையடுத்து சம்பந் தப்பட்ட அதிகாரியிடம் முறையிட் டார் சரோஜா. அச்சடிக்கும்போது தவறு நேர்ந்திருக்கலாம் என்றும் இ-சேவை மையத்தில் புகைப் படத்தை மாற்றி அச்சிட்டுக் கொள்ளலாம் என்றும் அதிகாரி சமாதானம் செய்துள்ளார். இதற்கிடையே ஸ்மார்ட் குடும்ப அட்டைகளில் பல்வேறு பிழைக ளும் குளறுபடிகளும் இருப்பதாக ஆங்காங்கே பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை காஜல் அகர்வால்

