சென்னை: சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு பதில் அளிக்க மேலும் 5 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தினகரனை ஆதரிக்கும் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் முதல்வர் எடப்பாடி பழனி சாமி ஆட்சியை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் அண்மையில் ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி சபாநாயகர் தனபால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் எனவும் கெடு விதித்திருந்தார். இந்நிலை யில் நேற்று தினகரன் ஆதரவாளரான எம்எல்ஏ வெற்றிவேல் 3 முறை சபா நாயகரைச் சந்தித்தார். அப்போது எந்த அடிப் படையில் எம்எல்ஏக்கள் ஆளுநரைச் சந்தித்தனர் என்பதற்கான ஆவணங் களை அவர் சபாநாயகர் தனபாலிடம் தனது வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்ததாகத் தெரிகிறது. எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தது தொடர்பில் இடைக்கால பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். இதற்கிடையே தினகரன் அணியில் இருந்து முதல் வர் பழனிசாமி பக்கம் தாவி யுள்ள எம்எல்ஏ ஜக்கையன், நிர்பந்தம் காரணமாகவே ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாக சபாநாய கரிடம் விளக்கம் அளித்துள்ளார்.

