தஞ்சை: சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் சில மாதங்களுக்கு முன்னர் இரு பஞ்சலோக சிலைகளை மீட்டனர். ஆனால் இவற்றை மீண்டும் கடத்தல்காரர்களிடமே காதர் பாட்ஷா விற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், கைது நடவடிக்கைக்கு அஞ்சி தலைமறைவானார். அவருக்கு உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளர் சுப்புராஜ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தேடப்பட்டு வந்த காதர் பாட்ஷாவை கும்பகோணத்தில் வைத்து போலிசார் கைது செய்தனர்.
சிலை கடத்தல் விவகாரம்: காவல்துறை அதிகாரி கைது
1 mins read

