சென்னை: நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங் கப்பட மாட்டாது என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவிலேயே தமிழக அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் காரணமாக மாணவர்க ளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து போராட்டத்துக்கு தடை விதிக்கப் பட்டது. எனினும் தடையை மீறி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஆசிரியர் களுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு எத்தகைய நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து 18ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டார்.