பக்பத்: யமுனை ஆற்றில் 60 பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானதாக பக்பத் மாவட்ட நீதிபதி பவானி சிங் கூறினார். அளவுக்கு அதிகமானோரை ஏற்றிச் சென்றதால் நிகழ்ந்த விபத்தில் இதுவரை 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. கதா கிராமத்திலிருந்து ஹரியானாவில் இருக்கும் சோனிபட்டுக்கு வேலை தேடிச் சென்ற தினக்கூலிகள் பலர் அந்தப் படகில் பயணம் செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். நேற்று காலை 8 மணியளவில் விபந்து நேர்ந்தாலும் மீட்புப் படையினர் வரத் தாமதமானதால் அந்தப் பகுதியில் இருந்த உள்ளூர்வாசிகள் டெல்லி-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாகச் சென்ற வாகனங்களுக்கும் அவர்கள் சேதம் விளைவித்தனர். தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
1 mins read

