புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸே„ அபே ஆகியோர் இணைந்து நேற்று அடிக்கல் நாட்டிய அதிவேக ரயில் திட்டம் இந்தியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற அகமதாபாத் - மும்பை இடையே யான அதிவேக ரயில் திட்டத் துக்கான தொடக்கவிழாவில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 'மேக் இன் இந்தியா' திட்டத்தை இது மேம்படுத்தும் என்று கூறியதோடு அந்தத் திட்டத்துக்கு இந்தியாவும் ஜப்பானும் கடப்பாடு கொண்டிருப்ப தாகவும் அவர் சொன்னார். இரு நாடுகளுக்கு இடையே யான நட்புறவை மேம்படுத்தி தங்களது பங்காளித்துவத்தை வலுப்படுத்த இருப்பதாக இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித் தனர். இந்தத் திட்டத்துக்காக தொழில்நுட்ப, நிதி உதவி வழங்கும் ஜப்பானுக்கும் அதன் பிரதமருக்கும் திரு மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
'அதிவேக ரயில் நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்'
1 mins read

