புதுடெல்லி: வெளிநாடுகளில் முதலீடு செய்யும் இந்தியர்களின் கவனம் ஆசிய நாடுகளின் மீது திரும்பியுள்ளது. 2015ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1% அதாவது, சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய் ஆசிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 53% முதலீடுகள் ஹாங்காங், மக்காவ், சிங்கப்பூர், பஹ்ரைன், மலேசியா போன்ற நாடுகளில் செய்யப்படுகின்றன. 2007ஆம் ஆண்டு சுவிட்சர்லாந் தில் 58%ஆக இருந்த இந்தியர் களின் முதலீடு தற்போது 31% ஆகக் குறைந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளுக்கு தற்போது சுவிட்சர்லாந்தை இந் தியர்கள் விரும்புவதில்லை என 'பிஐஎஸ்' எனப்படும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான தீர்வுகளைக் கையாளும் அனைத்துலக அமைப் பின் அண்மைய அறிக்கை தெரி விக்கிறது. சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் அதிக அளவிலான முதலீடுகளை அவர் கள் மேற்கொள்கின்றனர்.
சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிக முதலீடு செய்யும் இந்தியர்கள்
1 mins read

