மதுரை: அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்கூட்டத்தைக் கூட்டி மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என்று அறிவித் தனர். இதற்குப் பதிலடியாக சசிகலா தரப்பில் டிடிவி தினகரன் பொதுக் கூட்டத்தைக் கூட்ட போவதாக அறிவித்தார். இந்தக் கூட்டம் இம்மாதம் 19ஆம் தேதி திருச்சியில் நடை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் டிடிவி தினகரன் கூட்டும் கூட் டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட செய லாளர் சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இம் மாதம் 19ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் டிடிவி தினகரனின் பொதுக்கூட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதே சமயத்தில் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு உரிய பாது காப்பை வழங்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்தது. இதற்கிடையே அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செய லாளர் டிடிவி தினகரன், "முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அடுத்த வாரம் வீட்டுக்கு அனுப்புவோம்," என்று சூளுரைத்துள்ளார்.

