நீதிமன்றம் எச்சரிக்கை; போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஊழியர்கள்

நீதிமன்றம் எச்சரிக்கை; போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஊழியர்கள்

1 mins read

மதுரை: மதுரை உயர் நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிக மாக ஒத்திவைத்துள்ளனர். "ஒரு மணி நேரத்தில் வேலையி லிருந்து நீக்க எங்களுக்கு அதி காரமுள்ளது. அதனால் வேலை நிறுத்தப் போராட்டத்தை மீட்பது குறித்து முடிவு செய்யுங்கள்," என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதற்காக சில நிமிட நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்திலேயே ஆலோசனை நடத்திய ஜாக்டோ-ஜியோ சங்க நிர்வாகிகள் மீண்டும் நீதிபதிகள் முன்பு முன்னிலையாகினர். அப்போது, நீதிமன்றம் தடை விதித்த பிறகும் எந்த அடிப் படையில் நீங்கள் போராட்டத்தைத் தொடர்கிறீர்கள் என்று சங்க நிர் வாகிகளிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர். இதற்குப் பதில் அளித்த "ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டோம்," என்றனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "தடை விதிக்கப்பட்ட பிறகு உங்களுடைய கோரிக்கை களை நீதிமன்றத்தில் தெரிவித் திருந்தால் அதற்கேற்ப உத்தரவு பிறப்பித்திருப்போம்," என்றனர். பின்னர் நீதிமன்ற அறிவுறுத்த லின்பேரில் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக மீட்டுக்கொள்வதாக ஜாக்டோ- ஜியோ சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதி பதிகள், "பிற்பகல் 2 மணிக்கு மேல் அரசு ஊழியர்களும் ஆசிரி யர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும்," என்று நேற்று காலை உத்தரவிட்டனர்.