ஹெச்.ராஜா படுதோல்வி

ஹெச்.ராஜா படுதோல்வி

1 mins read

சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தோல்வியடைந்தார். ராஜாவை எதிர்த்துப் போட்டியிட்ட பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணி அமோக வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் மணி 232 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹெச் ராஜா, வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்றார். தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு அரசியல்வாதி ஒருவர் போட்டியிடுவது இதுவே முதன் முறையாகும். பி.ஜே.பியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா களமிறங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தொடர்ந்து ராஜா இந்தப் பதவிக்குப் போட்டியிடும் அறிவிப்பு வெளியான வுடன் அவருக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சியின் தலைவர்களும் தொடர் அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், அவர் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.