எம்பிக்குரிய ஓய்வூதியம் வேண்டாம்: சரத்குமார் வலியுறுத்து

எம்பிக்குரிய ஓய்வூதியம் வேண்டாம்: சரத்குமார் வலியுறுத்து

1 mins read

சென்னை: தனக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை நிறுத்திவிடுமாறு மாநிலங்களவை செயலருக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடிதம் எழுதி உள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வானார் சரத்குமார். இதன் பின்னர் 2006ஆம் ஆண்டு திமுகவில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து அவ ருக்கு மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருக்குரிய ஓய்வூதி யம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமக்குரிய ஓய்வூதி யத்தை நிறுத்திவிடுமாறு அவர் மாநிலங்களவை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பிற வழிகளில் வருமானம் ஈட்டக்கூடிய மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஓய்வூதியத்தை நிறுத்திவிட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.