சென்னை: முன்னாள் முதல்வர் என்ற வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது. தற்போது கருணாநிதிக்கு இசட் பிளஸ் எனப்படும் கமாண்டோ படைப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இத்தகைய பாதுகாப்பு வளையத்துள் இருக் கும் பிரமுகர்களுக்கு குண்டு துளைக்காத வாகனம் அளிக்கப் படுவதுடன், நாற்பது கமாண்டோ படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுவர். கருணாநிதி உட்பட நாடு முழுவதும் 15 அரசியல் தலைவர் களுக்கு மட்டுமே இத்தகைய உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் இசட், ஒய் மற்றும் எக்ஸ் என பல பிரிவுகளில் முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது மத்திய அரசு. இந்த நிலையில், பாதுகாப்பு வழங்கப்படும் தலைவர்கள் எண் ணிக்கையை குறைக்குமாறு மத்திய அரசிடம் கமாண்டோ படைப் பிரிவு கேட்டுக்கொண் டதை அடுத்து கருணாநிதி, அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கான உயர் பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக்கொள்வதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பு ரத்து
1 mins read

