சிறைக்குச் செல்வார் தினகரன்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

சிறைக்குச் செல்வார் தினகரன்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

2 mins read

சென்னை: தினகரன் பிடித்து வைத்திருக்கும் எம்எல்ஏக்களை வெளியே விட்டால், தங்களிடம் ஓடோடி வந்துவிடுவர் என முதல் வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்று முயற்சி செய்த தினகரன் குடும்பத் தினருக்கு அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட் டார். ஜெயலலிதாவால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் தினகரன் எனச் சுட்டிக்காட்டிய முதல்வர், மிக விரைவில் தினகரன் சிறைக்குச் செல்லப்போவது உறுதி என்றார். "அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. தினகரனின் கனவு பலிக்காது. துரோகம் செய் தவர்களை எல்லாம் ஜெயலலிதா வின் ஆன்மா தண்டித்துக்கொண் டிருக்கிறது. அந்த வகையில் தினகரனும் தப்பமுடியாது. ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியைக் கொடுக்க கருணாநிதியே தயங் கும்போது மக்கள் ஏற்றுக் கொள் வார்களா?" என முதல்வர் பழனி சாமி கேள்வி எழுப்பினார்.

மத்திய பாஜக அமைச்சரவையில் 5 ஆண்டு காலம் இடம்பிடித்திருந்த திமுக, இப்போது பாஜகவை தீண்டத்தகாத கட்சி என கூறுவதை ஏற்க இயலாது என்று குறிப்பிட்ட அவர், ஜப்பான் உதவி யுடன் தமிழகத்தில் தொழில்நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். கடும் வறட்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அவர் பெருமிதத் துடன் குறிப்பிட்டார். இதற்கிடையே காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ஒரு வாரத்திற்குள் இரட்டை இலை சின்னம் மீட்கப்படும் என்றார்.