துறவறம் மேற்கொள்ளும் இளம் தம்பதியர்

துறவறம் மேற்கொள்ளும் இளம் தம்பதியர்

1 mins read
c9fad8a5-cdd7-49dd-b70f-c47331e7229c
-

ஜெய்ப்பூர்: இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான இளம் தம்பதியர், நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் மூன்று வயது மகளையும் கைவிட்டு துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது முடிவு குடும்ப உறுப்பினர்களை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களையும் அதிர்ச் சியில் ஆழ்த்தியிருக்கிறது. நீமுச் என்ற ஊரில் வசிக்கும் ஜெயின் தம்பதியரான 35 வயது சுமித் ராத்தோரும் 34 வயது அனாமிகாவும் நான்கு ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் மகளும் இருக் கிறாள். லண்டன் நகரில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பட்டயப் படிப்பை முடித்த சுமித், அங்கேயே சிறிது காலம் பணிபுரிந்து வந்தார். ஆனால் பெற்றோர் வற்புறுத் தியதால் சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு திரும்பிய அவர் தந்தையின் தொழிலைக் கவனித்து கொண்டார். பொறியியல் பட்டதாரியான இவரது மனைவி அனாமிகா, ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார்.

சன்னியாசத்தை விரும்பும் தம்பதியர் சுமித் ராத்தோர், அனாமிகா ராத்தோர். படம்: இந்திய ஊடகம்