பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப் பட்ட பிரபல பத்திரிகையாளர் 'லங்கேஷ்' பத்திரிகையின் பெண் ஆசிரியர் கவுரி லங்கேஷ், கொலை யாளியை நேரில் பார்த்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இம்மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி அவரது வீட்டு வாசலில் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்தக் கொலை குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசார ணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கு மாநில உளவுப்பிரிவு ஐஜி பி.கே.சிங் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, கவுரி லங் கேஷின் வீடு, அலுவலகத்தில் ஆய்வு செய்தது. கவுரி லங்கேஷின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்த 30 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது கவுரி லங்கேஷ் வீட்டின் முன்புறம் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வில் கொலை சம்பவம் பதிவாகி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கேமராவில் பதிவாகி யிருந்த காட்சியில் வீட்டின் பெரிய கதவை கவுரி லங்கேஷ் திறக்க முயற்சி செய்கிறார். அந்தச் சமயத்தில் தலைக் கவசம் அணிந்திருந்த கொலை யாளி அவரை அழைக்கிறான். இதையடுத்து கவுரி திரும்பிய போது கொலையாளி சுடுகிறான். இதில் கவுரியின் வலது விலா வில் குண்டு பாய்கிறது. இரண்டாவது குண்டு இடது விலாவில் பாய்கிறது. ரத்தம் வழிந்தோட கவுரி வீட்டுக்குள் ஓடுகிறார். இதனால் கொலையாளி முன் னால் வந்து சுடுகிறான். ஆனால் குறி தவறிவிடுகிறது. நான்காவது குண்டு அவரது முதுகில் பாய்ந்த தால் அவர் சரிந்து விழுகிறார். அடுத்த நிமிடம் மோட்டார் சைக்கிளில் கொலையாளி தப்பிச் சென்றுவிடுகிறான். இந்தக் காட்சிகளை காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்ற னர்.

