ஆட்சியரைக் கொல்ல முயற்சி; கூலிப்படையினர் 3 பேர் கைது

ஆட்சியரைக் கொல்ல முயற்சி; கூலிப்படையினர் 3 பேர் கைது

1 mins read
980aace0-0f08-4668-87cb-77c1c2452515
-

தி.மலை: மாவட்ட ஆட்சியரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் காரணமாக திருவண்ணாமலை யில் பெரும் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக கூலிப்படையினர் எனச் சந்தேகிக்கப்படும் மூவரை போலிசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத் தின் புதிய ஆட்சியராக கே.எஸ். கந்தசாமி அண்மையில் பொறுப் பேற்றுக்கொண்டார். நேற்று முன்தினம் அவர் ஆட்சியர் அலு வலகத்தில் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்ட பின்னர் மதிய உணவுக்காக, அலுவலகம் அருகே உள்ள ஆட்சியர் பங்களாவுக்கு நடந்து சென்றார். அவருடன் நேர்முக எழுத்தர், உதவியாளர் ஆகியோரும் பங் களா நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கி ளில் திடீரென அங்கு வந்து சேர்ந்த மூன்று மர்ம நபர்கள், தாங்கள் அணிந்திருந்த தலைக் கவசத்தைக் கழற்றிவிட்டு ஆட்சி யரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

இந்தத் திடீர் தாக்குதலால் நிலைதடுமாறிய ஆட்சியர் கந்ச சாமி கீழே விழுந்தார். அவர் தாக்கப்படுவதைக் கண்ட பங் களா பணியாளர்களும் பாது காப்புக்கு நின்றிருந்த போலிசாரும் அவரை மீட்க விரைந்து வந்தனர். பல பேர் ஓடி வருவதைக் கண்டதும் மர்ம நபர்கள் அங் கிருந்து ஓட்டம் பிடித்தனர். எனி னும் போலிசாரும் பணியாளர்களும் அவர்களை விரட்டிப் பிடித்தனர்.

கந்தசாமி. படம்: இணையம்