தர்மபுரி: தமிழக அரசு வழங்கும் விவேக (ஸ்மார்ட்) குடும்ப அட்டைகளில் பல் வேறு குளறுபடிகள் இருப்ப தாகப் பரவலாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்த அட்டையில் பயனா ளரின் புகைப்படத்துக்குப் பதிலாக ஒரு காலணியின் படம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அண்மையில் சேலத்தைச் சேர்ந்த சரோஜா என்ற மூதாட்டிக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. அதில், அவரது புகைப்படம் இடம்பெறவில்லை. மாறாக, திரைப்பட நடிகை காஜல் அகர்வாலின் படம் காணப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தார் சரோஜா. அதற்குள் சமூக வலைத் தளங்களில் இத்தகவல் வேகமாகப் பரவ, அரசுத் தரப்பை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் போசிநாயக்கம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் அவரது புகைப்படத்தைக் காணவில்லை. அதற்குப் பதிலாக காலணி ஒன்றின் புகைப்படம் இடம்பெற்றுள் ளது. அவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ள நிலையில், சமூக வலைத் தளங்களில் இத்தகவல் பலரால் பகிரப் பட்டு வருகிறது. இதைய டுத்து தமிழக அரசு மீது கடும் விமர்சனங்கள் தொடர்கின்றன.

