சென்னை: தம்மைக் கண்டு முதல்வரும் அமைச்சர்களும் அஞ்சுவது ஏன்? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் தரப்பில் உள்ளவர்கள் ஊழல் செய்துவிட்டு அச்சத்துடன் இருப்பதாகக் கூறினார். "சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் முதல்வர் பழனிசாமி. அவரது தரப்பினர் அனைவரும் வீட்டுக்குச் செல்வது உறுதி. முதல்வரது உறவினர்களில் பலர் ஏற்கெனவே சிறைக்குச் சென்றவர்கள். அத்துடன் என் மீது சுமத்தப்பட்டுள்ள அந்நியச் செலாவணி வழக்கு ஊழல் வழக்கு அல்ல," என்றார் தினகரன்.
டிடிவி தினகரன்: ஊழல் செய்ததால் முதல்வர் தரப்புக்கு அச்சம்
1 mins read
-

