19 சீர்வரிசைகளுடன் பசு மாட்டுக்கு நடந்த வளைகாப்பு

19 சீர்வரிசைகளுடன் பசு மாட்டுக்கு நடந்த வளைகாப்பு

1 mins read
552e9c01-bc02-495f-b97a-33bc99790b57
-

சேலம்: தான் வளர்க்கும் பசு மாட்டுக்கு 19 வகை சீர் வரிசைகளுடன் வளைகாப்பு நடத்தி பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார் கோவையைச் சேர்ந்த விவசாயி ஒருவர். தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்த கிஷோர் குமார் என்ற 38 வய தான அவர், இயற்கை விவ சாயத்தில் நாட்டம் கொண்டவர். கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். தற்போது காங்கேயம், தஞ் சாவூர் குட்டை, கிர் இன மாடுகளை வளர்த்து வரும் இவர், தன்னிடம் வளரும் பசு வுக்கு துர்கா என பெயரிட் டுள்ளார். கிஷோர் குமாருக்கு மகள் பிறப்பதற்கு 15 நாட்க ளுக்கு முன்னர்தான், துர்காவும் பிறந்துள்ளது. அதனால் துர்கா வையும் தன் வீட்டின் உறுப்பின ராகக் கருதி பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். "துர்கா சினையாகி 9 மாதம் ஆனதையடுத்து வளைகாப்பு நடத்தினோம். அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது," என்று உவகையுடன் சொல்லும் கிஷோர் குமார், இந்நிகழ்வை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார்.

வளைகாப்பு நிகழ்வுக்குப் பின்னர் பசு மாட்டை இயற்கை முறை விவசாயிகளும் கிஷோர் குமார் குடும்பத்தினரும் வணங்கிய காட்சி. படம்: தமிழக ஊடகம்