சென்னை: போதைப் பொருள் கடத்திய குற்றத்தின் பேரில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. டில்லியா எடினா என்ற பெயர் கொண்ட 40 வயதான அந்தப் பெண் நேற்று முன்தினம் டெல்லி யில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தபோது போலிசா ரிடம் வசமாகச் சிக்கினார்.
முன்னதாக டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென் னைக்குப் போதைப் பொருள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், துரித நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ரயில் மூலம் கடத்தி வரப்படும் போதைப் பொருளைப் பறிமுதல் செய்யவும், கடத்தி வருபவர்களைக் கைது செய்யவும் கச்சிதமாகத் திட்டம் வகுத்தனர். டெல்லியில் இருந்து வந்த தமிழ்நாடு எக்ஸ் பிரஸ் ரயிலில் பயணம் மேற் கொண்ட பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போது டில்லியா எடினா மீது போலிசாருக்கு சந்தேகம் ஏற் பட்டது. அவரிடம் இருந்த உடை மைகளை சோதனையிட்டபோது, அவர் வைத்திருந்த 44 சிறிய டின் கள் சந்தேகத்தை வலுப்படுத்தின.

