காவிக் கூட்டத்துக்கு தீர்ப்பளிக்க மக்கள் தயாராகிவிட்டனர்: ஜி.ராமகிருஷ்ணன்

காவிக் கூட்டத்துக்கு தீர்ப்பளிக்க மக்கள் தயாராகிவிட்டனர்: ஜி.ராமகிருஷ்ணன்

1 mins read
67132637-8ce8-43a5-add6-77979ca5873b
-

தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப் பட வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், சாரணர் படைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசியச் செயலர் எச்.ராஜா அடைந்திருக்கும் தோல்வி, தமிழ கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு என விமர்சித்தார். "சாரணர் படைத் தேர்தலில் போட்டியிட்ட எச்.ராஜாவுக்கு வாக்களிக்க வேண்டுமென அமைச்சர்கள் கூட வெளிப்படை யாக கேட்டுக் கொண்டனர். ஆனால், அதையும் மீறி அவர் படுதோல்வியை சந்தித்துள்ளார். தமிழக மக்கள் காவி கூட்டத்துக்கு தீர்ப்பு அளிக்க தயாராகிவிட்டனர். அந்தத் தீர்ப்பின் முன்னோட்டம் தான் எச்.ராஜாவுக்கு ஏற்பட்ட தோல்வி," என்றார் ராம கிருஷ்ணன். உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடி யாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டப் பேரவையில் தமது பெரும்பான் மையை நிரூபிக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே, நாட்டில் தனி மனித சர்வாதிகாரம் காலூன்றி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கவலை தெரிவித் துள்ளார். கோவையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தற்போதைய மத்திய பாஜக அரசு, இந்திய அரசியல் சட்டத்தை பின்னுக்கு தள்ளுகிறது என்றும், நாடாளு மன்ற நெறிமுறைகளை தகர்த்து வருகிறது என்றும் சாடினார்.