மகா புஷ்கரம்: துலாகட்டத்தில் ஒரே நாளில் லட்சம் பேர் புனித நீராடினர்

மகா புஷ்கரம்: துலாகட்டத்தில் ஒரே நாளில் லட்சம் பேர் புனித நீராடினர்

1 mins read
745cf708-d805-48ba-bb7c-218cacd53e69
-

நாகை மாவட்டம், மயிலாடு துறை துலாக்கட்டத்தில் நடைபெற்ற காவிரி மகா புஷ்கரம் விழாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். இவ்விழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர் கள் தினமும் வந்து நீராடிச் செல்கின்றனர். ஞாயிறு விடு முறை நாள் என்ற போதிலும், காவிரிக் கரை முழுவதும் பக்தர்களால் நிரம்பி இருந்தது. காவிரி மகா புஷ்கர விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்கிறார். மேலும், இன்று மகாளய அமாவாசை வருவதால் கூட்டம் மிக அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: தகவல் ஊடகம்