நாமக்கல்: சசிகலா குடும்பத் தினர் தொடர்பான ரகசியங்களை வெளியிடப் போவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதாவால் ஏற்ப டுத்தப்பட்ட நடப்பு அதிமுக ஆட்சி தொடரக் கூடாது என சிலர் சதி திட்டம் தீட்டுவ தாகக் குற்றம்சாட்டினார். "சசிகலா குடும்பம் குறித்த பத்து விழுக்காடு ரகசியங் களைச் சொல்லி உள்ளேன். அவர்கள் தொடர்ந்து என்னை பற்றி ஏதாவது சொன்னால், நானும் தொடர்ந்து பல ரகசியங்களை வெளியிடு வேன்," என எச்சரித்தார் ஓ. பன்னீர்செல்வம்.
ரகசியங்கள் பல வெளியாகும்: துணை முதல்வர் ஓபிஎஸ்
1 mins read
-

