சென்னை: காலஞ்சென்ற முதல் வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படங் களை வெளியிடுவது குறித்து டிடிவி தினகரன் தரப்பு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. திடீரென உடல்நலம் குன்றி யதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. சுமார் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகும் அவரது உடல்நிலை முன்னேற்றம் காண வில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அவரை சந்திக்க முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் என யாருமே அனுமதிக்கப்பட வில்லை. அவருக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை குறித்த தகவல் களும் முதலில் வெளியாகவில்லை. இந்நிலையில் அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலா குடும்பம் தான் காரணம் எனப் பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பினர்.
ஜெயலலிதா புகைப்படங்களை வெளியிட தினகரன் திட்டம்
1 mins read
-

