விழுப்புரம்: கல்வி, பொருளாதாரம், விவசாயம் தொடர்பான கொள்கை களை மாநில அரசின் கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வரவேண்டும் என பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி கூறியுள்ளார். மாநில சுயாட்சி என்பது மக்களின் உரிமை என்றும், அது மாநிலப் பிரிவினை அல்ல என்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக வின் சமூக நீதி மாநாட்டில் பேசும் போது அவர் தெளிவுபடுத்தினார். மாநில சுயாட்சிக்காக ஜல்லிக் கட்டுப் புரட்சிப் போன்று இளை யர்கள் மீண்டும் ஒரு புரட்சியை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங் களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். "முன்பு கல்வி என்பது மாநிலக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவசர காலக்கட்டத் தின்போது இந்திரா காந்தி கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றிவிட்டார். "பிரதமர் மோடி குஜராத் முதல் வராக இருந்தபோது மாநிலங்க ளுக்கு அதிகாரம் வேண்டுமென்று கேட்டார். ஆனால், தற்போது எல்லா அதிகாரங்களையும் அவரே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். இதை ஏற்க இயலாது," என்று அன்புமணி விமர்சித்தார்.
மாநில சுயாட்சி மக்களின் உரிமை: சுட்டிக்காட்டும் பாமக
1 mins read
-

