இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்தநாளுக் காக இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டினரிடமிருந்தும் வாழ்த் துகள் குவிந்தாலும் ஆந்திராவின் ராயலசீமா பகுதி விவசாயிகள் வித்தியாசமான பரிசை அனுப்பி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் மோடியின் பிறந்தநாளை சேவா தினமாக பாஜகவினர் கொண்டாடினர். ஆந்திராவின் ராயலசீமா பகுதி யைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்று இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்தப் பகுதியில் இருக்கும் விவசாயிகளின் வறு மையைச் சுட்டிக்காட்டியுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட ராயலசீமா விவசாயிகளுக்காகச் செயல்படும் ராயலசீமா சகுநீதி சாட்ஹனா சமிதி (ஆர்எஸ்எஸ்எஸ்) எனும் அந்த அமைப்பு தலா 68 பைசாவுக்கான (0.0142 சிங்கப்பூர் டாலர்) 400 வங்கிக் காசோலை களை பிரதமருக்கு பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்துள்ளது.
"ராயலசீமா விவசாயிகள் பின் தங்கியிருப்பதை எடுத்துரைத்து பிரதமரின் கவனத்தை விவசாயி கள் பக்கம் திருப்புவதற்காகவே 68 பைசாவுக்கான காசோலைகள் அனுப்பிவைக் க ப் ப ட் டு ள் ள ன , " என ஆர்எஸ்எஸ்எஸ் அமைப்பின் இணைத் தலைவர் யேர்வா ராமச்சந்திர ரெட்டி கூறினார். இயற்கை வளங்கள் பெருகி இருந்தாலும் நாட்டிலேயே மிகவும் பின் தங்கிய பகுதியாக ராயலசீமா இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்தது. கர்நூல், அனந்தப்பூர், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் கிருஷ்ணா, பெண்ணை ஆறுகள் பாய்ந்தபோதும் அங்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை மிகுந்திருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.

