தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் தங்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என அறிவிக் கக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் சென்னை உயர் நீதி மன்றத்தை நாடினர். தங்களது மனுவை அவசர மனுவாக ஏற்றுக்கொண்டு விசா ரிக்க வேண்டும் என்ற அவர் களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இன்று அந்த மனு மீது விசாரணை நடத்தப் படும் என்று அறிவித்தார். இந்த வழக்கில் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கும் தினகரன், நாளை மறுநாள் 22ஆம் தேதி யுடன் முதல்வர் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று சொன்னார். முன்னதாக, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார் எனக் கூறி, அதனால் உடனடியாக சட்ட மன்றத்தைக் கூட்டி அவர் தமது பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லும்படி ஆளுநருக்கு உத் தரவிடவேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
தினகரனைக் கைது செய்யத் தடை
1 mins read

