பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி; சென்னை ஆடவர் கைது

பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி; சென்னை ஆடவர் கைது

1 mins read

ஐஎஸ் அமைப்பின் கொள்கை களைப் பரப்ப முயன்றதாகவும் தமிழ்நாட்டின் பல இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியதாக வும் கூறி சென்னையைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு (என்ஐஏ) கைது செய்துள்ளது. சாகுல் ஹமீது என்ற அந்த ஆடவர் மேலும் எண்மருடன் சேர்ந்து பயங்கரவாதத் தாக்குதல் களுக்குத் திட்டமிட்டதாக என்ஐஏ வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. அந்த ஒன்பது பேர் மீது கடந்த ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் உள்ள என்ஐஏ போலிஸ் நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. "குற்றம் சாட்டப்பட்டோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந் தவர்களும் தடை செய்யப்பட்ட ஐஎஸ் இயக்கத்தைப் பரப்ப நோக்கம் கொண்டனர். அதற்காக 2013ஆம் ஆண்டில் ஒரு பயங்கர வாதக் கும்பலை உருவாக்கிய அவர்கள் நிதி திரட்டி, பல கூட்டங்களை நடத்தியதுடன், ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்து சிரியாவுக்கு அனுப்பும் நடவடிக்கை யிலும் ஈடுபட்டனர்," என்று என்ஐஏ அறிக்கை தெரிவித்தது.