கூண்டோடு பதவி விலகல்: ஆளும் தரப்புக்கு திமுக நெருக்கடி

கூண்டோடு பதவி விலகல்: ஆளும் தரப்புக்கு திமுக நெருக்கடி

1 mins read
abda5ce1-8e8b-40b0-99b7-a7cc718e1557
-

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்துள்ள உத்தரவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பையும் புதிய விவாதங் களையும் எழுப்பியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் படு சூடாகவும் சுறுசுறுப் பாகவும் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் தேர்தல் வருவதற் கான அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி தரப்புக்கு தினகரன் மட்டுமல்லாமல், எதிர்க் கட்சிகளும் பதிலடி கொடுக்க வரிந்து கட்டியுள்ளன. இதன் எதிரொலியாக சபாநாயகரின் நட வடிக்கையைக் கண்டித்து எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்த மாக தங்கள் பதவியைத் துறக்கும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு நிகழும் பட்சத்தில், அது ஆளும் தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கி றார்கள் அரசியல் கவனிப்பாளர் கள். அப்படியொரு சூழலில் சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு, தேர்தலை எதிர்கொள்வது மட்டுமே ஆளும்தரப்புக்கு இருக் கும் ஒரே வழி என்றும் கூறப் படுகிறது. முதல்வர் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக 112 பேரும் அதிமுக கூட்டணியில் 3 எம்எல்ஏக்களும் உள்ளனர். தினகரன் அணியைச் சேர்ந்த 18 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் தற்போது 98 எம்எல்ஏக்கள் உள்ளனர்.