திருச்சி: தமக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், ஆளுநர் தேவையின்றிக் காலம் தாழ்த்திய தால்தான் இப்படியொரு ஜன நாயகப் படுகொலை நிகழ்ந்திருப்ப தாகக் குற்றம்சாட்டினார். அதிமுகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதிலும், முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள மேலும் 12 எம்எல்ஏக்களின் ஆத ரவு தமக்கு இருப்பதாக புதுக் குண்டை வீசியுள்ளார் தினகரன். இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. தற்போதுள்ள அரசியல் சூழ் நிலையில் மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், சட்டப்பேர வையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தங்களது பலத்தைக் காட்டப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தினகரன்: முதல்வர் தரப்பிலும் 12 பேர் ஆதரவு எனக்குண்டு
1 mins read
-

