சென்னை: போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராஜபக்சே மீது இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் வெளி யிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் தமிழர் களது நிலங்களில் இருந்து அந்நாட்டு ராணுவம் வெளியேறவில்லை எனவும் சுட்டிக்காட்டி உள்ளார். ஈழத்தழிழர் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என வலி யுறுத்தியுள்ள ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் தரவில்லை எனக் குறைகூறியுள்ளார். "தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்துவதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். ஈழத்தமிழர்கள் மீது ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு மறுப்பு தெரிவித் திருப்பதை ஏற்க இயலாது.
ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு அநீதி இழைக்கிறது," என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் 36ஆவது மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது. இதற்கிடையே, ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்றுள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோவும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து ஈழத்தமிழர்கள்தான் இலங்கைத் தீவின் பூர்வீகக் குடி மக்கள் என அவர் ஆணித்தரமாகக் கூறினார்.

