அரசு: ரோஹிங்யா அகதிகளால் தேச பாதுகாப்புக்கு ஆபத்து

அரசு: ரோஹிங்யா அகதிகளால் தேச பாதுகாப்புக்கு ஆபத்து

2 mins read

புதுடெல்லி: மியன்மார் நாட்டி லிருந்து வந்துள்ள ரொஹிங்யா முஸ்லிம்கள் சட்டவிரோத அகதி கள் என்றும் அவர்களால் இந்தியா வின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத் தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் தொடர்பில் திங்கட் கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சு நீதிமன்றத்தில் பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் "இந்தியாவில் குடி யேறவும் நாட்டின் எந்தப் பகுதி யிலும் வசிப்பதற்கும் அரசியல் சாசனத்தின் 19ஆவது பிரிவு அளித்துள்ள அடிப்படை உரிமை இந்திய நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே உரித்தானது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையைக் கேட்டு நேரடியாகவோ பிறரது மூல மாகவோ உச்ச நீதிமன்றத்திடம் முறையிட சட்டவிரோத அகதி களுக்கு உரிமை கிடையாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

"இந்தியாவில் ரோஹிங்யா முஸ்லிம்கள் குடியேறுவதும் இங்கு வசிப்பதும் சட்டத்துக்குப் புறம் பானது மட்டுமல்லாமல் அவர்கள் இங்கு தங்கியிருப்பதால் தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ளது. "உச்ச நீதிமன்றம் விரும்பினால், ரோஹிங்யா அகதிகளால் ஏற் படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் கள் குறித்த விவரங்களைச் சீலிட்ட உறையில் சமர்ப்பிக்க மத்திய அரசு தயாராக உள்ளது," என்று மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. மியன்மாரில் பல தலை முறைகளாக வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களைச் சட்ட விரோதக் குடியேறிகளாக அந் நாட்டு அரசு கருதுவதால் அவர் களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வன்முறை சம் பவங்களிலிருந்து தப்பிய ரோஹிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடுகளான பங்ளாதேஷ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் தேடி வந்துள்ளனர்.