தினகரன் எம்எல்ஏக்களுக்கு தமிழக போலிஸ் வலைவீச்சு

தினகரன் எம்எல்ஏக்களுக்கு தமிழக போலிஸ் வலைவீச்சு

1 mins read

பெங்களூரு: தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னமும் குடகு மலைப் பகுதி யில் பதுங்கியிருப்பதாகக் கூறப் படும் அனைத்து எம்எல்ஏக்களுக்கு தமிழக காவல்துறை வலைவீசி யிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இரு எம்எல்ஏக்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரூர் எம்எல்ஏவும் முன்னாள் மாநில போக்குவரத்து அமைச் சருமான செந்தில் பாலாஜிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை தமிழக காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்பு நாமக்கல் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மற்றொரு எம்எல் ஏவும் முன்னாள் கல்வி அமைச் சருமான பழனியப்பன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு செந்தில் பாலாஜி தாம் அமைச்சராக இருந்தபோது வேலை வழங்குவதாகக் கூறி நாற்பது பேரிடம் சுமார் 2.5 கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றிவிட்ட தாகக் கூறப்படுகிறது.

அம்பத்தூரைச் சேர்ந்த வி. கணேஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் சிக்கியுள்ளார். பணத்தைத் திருப்பிக் கேட்ட போது மிரட்டப்பட்டதாகவும் புகார் தாரர் கூறினார்.