புதுடெல்லி: பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய் திறந்து பேசியிருக்கிறார். தமிழகத்தில் 18 எம்எல்ஏக்களின் நீக்கம் செல்லாது என்கிறார் அவர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி, "எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கம் செல்லாது," என்றார். தமிழகத்தில் இரண்டு வாரத்திற்கு மட்டும் அதிபர் ஆட்சியை அமலாக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் முடிவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் சாமி கூறியுள்ளார்.
எம்எல்ஏ பதவி நீக்கம் செல்லாது: சுப்பிரமணிய சாமி
1 mins read
-

