வாஷிங்டன்: கரீபியத் தீவுகளில் உள்ள டொமினிகா தீவை 'மரியா' புயல் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்தப் புயலின் தாக்கம் பற்றி அத்தீவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஃபேஸ்புக் பக்கத் தில், "மரியா புயல் ஈடு செய்ய முடியாத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது,"என்று கூறி னார். அவர் தனது வீட்டின் மேற்கூரை புயலினால் தூக்கியெறியப்பட்ட தாகவும் அவர் கூறினார். முன்னதாக இந்தப் புயல் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஐந்தாம் எண் வகைப் புயலாக வலுப்பெற்றது. கனத்த மழையுடன் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது மரியா புயல். இந்த மாதத்தின் முற்பாதியில் வீசிய இர்மா புயல் ஏற்படுத்திய கடுமையான பாதிப்பைப் போலவே மரியா புயலும் நகர்ந்து வருகிறது.
கரீபியத் தீவுகளில் 'மரியா' புயலின் தாக்கம்
1 mins read

