வெள்ளத்தில் தத்தளிக்கிறது மும்பை: கல்விக்கூடங்கள்

வெள்ளத்தில் தத்தளிக்கிறது மும்பை: கல்விக்கூடங்கள்

1 mins read
445bd5a7-d2df-4f9a-92b9-16142f3fc239
-

மூடல், விமானங்கள் ரத்து பலத்த மழையும் அதனால் ஏற் பட்ட பெருவெள்ளமும் மும்பை நகரை மீண்டும் ஒருமுறை பாடாய்ப்படுத்தியுள்ளன. நேற்று முன்தினம் மாலையில் விடாமல் பெய்த மழையின் காரணமாக நாட்டிலேயே இரண்டாவது பெரிய விமான நிலையம், பள்ளிகள், கல் லூரிகள் ஆகியவற்றின் சேவை கள் பெரிதாகப் பாதிக்கப்பட் டன. அத்துடன் புறநகர் ரயில் போக்குவரத்தும் அடியோடு முடங்கிப்போனது. நிதி நகரமான மும்பையில் இரண்டு பெரிய பங்குச் சந்தைகள் உள்ளன. மேலும் பல்வேறு பெரிய நிறுவனங் களின் தலைமை அலுவலகமும் இங்குதான் இயங்குகின்றன. கிட்டத்தட்ட 20 மில்லியன் பேர் வசிக்கும் மும்பை நகரில் கடந்த மாதம் பெய்த கனமழை 14 உயிர்களைப் பறித்ததுடன் ஏராளமான வீடுகளை அடித்துச் சென்றது. நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களின் வீடுகளி லிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஓடுபாதையைவிட்டு விலகி சேற்றில் சிக்கிக்கொண்ட ஸ்பைஸ்ஜெட் விமானம். படம்: இந்திய ஊடகம்