ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 கைபேசி திருடர்கள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 கைபேசி திருடர்கள்

1 mins read
a0986606-3ab0-4168-8339-5aa5d1904b09
-

கடந்த இரு மாதங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 திருடர்கள் கைபேசிக்கு குறி வைத்து டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் திருடி வந்துள்ளனர். இந்த 14 பேரில் அறுவர் இளங் குற்றவாளிகள். "ஆக்ரா அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் டெல்லி மெட்ரோ ரயில் பயணிகளைக் குறிவைத்து கைபேசிகளைத் திருடி வந்துள்ளனர். போலிசிடம் பிடிபடுவதற்கு முன்பாக இவர்கள் நேற்று முன்தினம் காலை 9 கைபேசிகளைத் திருடி உள்ளனர். ஆண் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட இந்தக் கும்பல் நாள் ஒன்றுக்கு மெட்ரோ பயணிகளிடம் இருந்து 20 முதல் 25 கைபேசிகளைத் திருடி வந்துள்ளது," என்று துணை போலிஸ் ஆணையர் பங்கஜ் குமார் சிங் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் கூறினார். படம்: ஊடகம்